திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதியில் உலக நலனுக்காக 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நேற்று நடைபெற்றது.விழாவையொட்டி கோவிலின் கருவறையில் விநாயகர் மற்றும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், சர்வ அலங்காரமும், மகாதீப தூப, ஆராதனையும் நடந்தது. அங்கு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நலன் வேண்டி விளக்கு ஏற்றி வழிபட்டனர்.