சுப்பிரமணிய சாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்

சுப்பிரமணிய சாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-11-06 14:49 GMT

சோளிங்கர் தோப்பு பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி நிறைவு பெற்றதை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சுப்பிரமணி சாமி, வள்ளி, தெய்வானை சாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜை, 108 சங்காபிஷேகம் நடந்தது.

பூஜையில் வைக்கப்பட்ட 108 கலசம் மற்றும் 108 சங்குகளில் இருந்த புனித நீரைக்கொண்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு அபிஷேகம்செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்