சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2022-11-08 19:47 GMT

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, தாலிகயிறு, குண்டு மஞ்சள், கண்ணாடி வளையல், விளக்குத்திரி, தையல் இலை, வெற்றிலை மற்றும் பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சம் பழம், பூச்சரம், உதிரிப்பூக்கள், பச்சரிசி, தீப எண்ணெய், கழுத்தில் அணியும் அடையாள அட்டை, புடவை மற்றும் ஜாக்கெட் உட்பட 22 பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்