108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முககவசம் வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முககவசம் வழங்க வலியுறுத்தப்பட்டது.;

Update: 2023-04-08 18:29 GMT

பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நேற்று நடந்தது. மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 ஆம்புலன்சுகளுக்கும் கோடை காலத்தில் வழங்கப்படும் கூடுதல் தண்ணீர் கேன் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வு காரணமாக கூடுதல் தொகையும் வழங்க வேண்டும். தற்பொழுது பரவி வரும் நோய் தொற்று காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு முக கவசம் (என் 95) மாதம் மாதம் கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள 17 ஆம்புலன்சுகளை முறையே மாதத்திற்கு ஒரு முறையாவது நுண்கிருமி நீக்கம் (பியூமிகேசன்) செய்து தரவேண்டும். அனைத்து ஆம்புலன்சுகளுக்கும் மாதம் ஒருமுறை வழங்கப்படும் மருந்து பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்