108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாத கலந்தாய்வு கூட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாத கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-18 18:45 GMT

பெரம்பலூரில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாத கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் செல்வகுமார் பேசினார். 108 ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாக அதிகாரியால் பல தொழிலாளர்களுக்கு தொலைதூரப் பணி பழிவாங்கும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை திரும்பப்பெறவும், உரிய நடவடிக்கை மேற்கொண்டு நியாயமான முறையில் பணி வழங்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் எப்போதும்போல் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து தரக்கோரி மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆம்புலன்சுகளுக்கு குடிநீர் பாட்டில், பஞ்சர், பேட்டரி செக்கப், காற்று பிடிக்க முறையாக மாதம் வழங்கப்பட்டு வந்த முன்பணம் ரூ.500-ஐ மீண்டும் மாதந்தோறும் வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வு, பி.எல். விடுப்பு மற்றும் தீபாவளி போனசுக்கான தொகைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் கிடைக்கப்பெறவில்லை என்றால் சங்கத்தின் மாநில தலைமை எடுக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்