108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-24 13:46 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க முதல் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் ஈசாக் தலைமையில் நடைபெற்றது. சென்னை மண்டல செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் சாமிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் போகிறது. சட்ட விரோதமாக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதற்கு அமைப்பு ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பணிச்சுமையின் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு தர வேண்டும், வார விடுமுறை, சம்பள உயர்வு முறையாக வழங்க வேண்டும், தொழிலாளர்கள் பணி மாற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு குழு அமைத்து நிர்வாகத்தை சீரமைத்து தொழிலாளர்களுக்கு நல்வழி செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மணம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு வாழ்த்துதுரை வழங்கி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்