108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-07-07 19:46 GMT

பெரம்பலூரில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் 2022-23-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி காலம் கடத்தாமல் ஊதிய உயர்வை சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர பணி வழங்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து தொழிலாளர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கையாளுவதை நிறுத்த வேண்டும். ஜி.பி.எஸ்.சில் உள்ள குறைபாடுகளை களைந்து சரி செய்ய வேண்டும். 3 நாட்களுக்கு முன்பாக விடுமுறை கேட்டு வழங்காமலும், முறையான வார விடுமுறை இன்றி தொடர்ந்து பணி செய்ய கட்டாயப்படுத்தும், கால தாமதமாக தொழிலாளர்களுக்கு பணியிடங்களை கூறும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் மாவட்ட அதிகாரியை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் அனைத்து 108 ஆம்புலன்சுகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்