108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு நேர்காணல்

108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடந்தது.

Update: 2022-11-19 17:37 GMT

அடுக்கம்பாறை


108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடந்தது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதன்படி, டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி நேர்காணலுக்கு 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முதலில் எழுத்து தேர்வும் மற்றும் 2-ம் கட்டமாக நேர்முக தேர்வும் நடத்தப்பட்டது. இதில் தகுதியின் அடிப்படையில் டிரைவர் பணிக்கு 12 பேரும், மருத்துவ உதவியாளர் பணிக்கு 52 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்