மரத்தில் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து

திண்டிவனம் அருகே மரத்தில் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-08-13 18:00 GMT

திண்டிவனம்:

கடலூர் மாவட்டம் ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் பாலமுருகன். வெடிவிபத்தில் காயமடைந்த இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை சிதம்பரம் அடுத்த கூலாபாடியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஓட்டினார். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையோர மரத்தில் மோதியதால் முன்பகுதி சேதமானது.

இதில் ஆம்புலன்சில் வந்த துளசிராமன், பாலமுருகன் உறவினர் நாகவள்ளி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மாற்று ஆம்புலன்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்