10.7 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்

வேலூர் விமான நிலையம் செயல்பட 10.7 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

Update: 2022-10-28 17:52 GMT

வேலூர் விமான நிலையம் செயல்பட 10.7 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

திடீர் ஆய்வு

மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அங்கு கிடப்பில் போடப்பட்டுள்ள விமான நிலைய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் விமான நிலைய முனையம் ஆரம்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. விமானம் இயக்க சுமார் 10.7 ஏக்கர் நிலம் தேவைபடுகிறது. இந்த நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம். அந்த இடத்தில் தான் ரேடார் அமைய உள்ளது.மேலும் பெரிய ரக விமானத்தை இயக்கவும் அந்த நிலம் தேவைப்படும். சிறிய ரக விமானத்தை எடுக்கவும் வசதியாக அமையும். எனவே இந்த 10.7 ஏக்கர் நிலம் அவசியமாகிறது.

ஆலோசனை

இந்த விமான நிலையம் சென்னை- பெங்களூரு ஆகிய நகருக்கு இடையே அமைந்துள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற பயன்பாட்டுக்காக பலர் வருகை தருகின்றனர். இந்த விமான சேவை அவர்களுக்கு வசதியாக அமையும். நிலம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விரைவில் பணிகள் முடிக்கப்படும். ஓடுதளத்தை அகலப்படுத்துவது தொடர்பாக வி.ஐ.டி.யின் சிவில் விமான போக்குவரத்து துறையிடம் சில ஆலோசனைகள் கேட்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆய்வின்போது பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர்கள் ஜெகன், பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்