10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்

10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வேல்முருகன் கூறினார்.

Update: 2023-04-23 17:44 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கூட்டத்தில் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மாநில அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் குறு வட்டங்கள் வாரியாக மின் உலர் தானிய சேமிப்பு கிடங்குகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த ஆலோசனையை ஏற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மண்டல பொருளாளர் ஜம்புலிங்கம், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மாநில துணைப்பொதுச் செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்