105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல்
105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தலைவாசல்:
தலைவாசல் அருகே வீரகனூர் ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்த கெங்கவல்லி தாலுகா 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னதுரை (வயது 47) எனபவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.