அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 101 பால்குட ஊர்வலம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 101 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-14 17:02 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு 101 பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பாலாற்றங்கரையிலிருந்து பால் குடத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோரிலை அடைந்தனர்.

பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதனைதொடர்ந்து கரக ஊர்வலமும், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடத்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடனர். மாலையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்