திருப்பரங்குன்றம் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
திருப்பரங்குன்றம் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் சிவாச்சாரியார்கள் தீபத்திற்கான சிறப்பு பூஜை செய்தனர். மேலும் திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த மகா குத்து விளக்கில் தீபம் ஏற்றினர். இதனையடுத்து பெண்கள் குத்துவிளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.