ஆடி கடைசி வெள்ளியையொட்டி மன்னார்குடி காளவாய் கரை சக்திவேல் கோட்டம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துெகாண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து சக்திவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி கவச அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.