பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை யாக வேள்வி பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மன் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 1008 குத்து விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் நன்செய் இடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை மகா மாரியம்மனுக்கு 10,008 பால்குட அபிஷேக விழா நடைபெற உள்ளது.