செங்கத்தில் பூப்பல்லக்கு விழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம்
செங்கத்தில் பூப்பல்லக்கு விழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
செங்கம்
செங்கத்தில் பூப்பல்லக்கு விழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
செங்கம் டவுன் தளவநாயக்கன்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற செடல் மாரியம்மன் கோவிலில் 33-ம் ஆண்டாக பூப்பல்லக்கு விழா செங்கம் மலர் தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் விரதமிருந்து பக்தர்கள் செங்கம் காக்கும்கரை விநாயகர் கோவிலில் இருந்து செடல் மாரியம்மனுக்கு பூ கரகம் எடுத்தும், தீ சட்டி எடுத்தும், 1008 பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
கிராமிய கலையான கோலாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் செடல் மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.