தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 1,000-வது குடமுழுக்கு - அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட தகவல்

தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-06 11:05 GMT

சென்னை,

சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் ஆயிரமாவது குடமுழுக்கு இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் திருப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்