பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 1,000 பேர் சேர்ந்துள்ளனர்

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 1,000 பேர் சேர்ந்துள்ளனர்

Update: 2022-12-11 18:45 GMT

மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் பொன்மகன் சேமிப்பு, பொது வைப்பு நிதி மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கான சிறப்பு முகாம் கடந்த 1-ந்தேதியில் இருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.இத்திட்டத்தின்படி, குழந்தைகள் மற்றும் அனைவரும் இக்கணக்கை தொடங்கலாம். தொடரப்படும் கணக்குகளுக்கு தற்போதைய வட்டி நிலவரப்படி 7.10 சதவீதம் வருடாந்திர வட்டியாக வழங்கப்படுகிறது. திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆண் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் அனைவரது எதிர்கால வளமான வாழ்க்கைக்கு இத்திட்டம் உகந்தது. மேலும் தகவல்கள் பெற அஞ்சல் துறை செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறியலாம். அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகுவதன் மூலமோ அல்லது உங்கள் பகுதி தபால்காரர்களை அணுகுவத்தின் மூலம் இத்திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்