கோவை அரசு கலைக்கல்லூரியில் 100 இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலைக்கல்லூரியில் நேற்று சிறப்பு பிரிவினருக் கான கலந்தாய்வு மூலம் 100 இடங்கள் நிரம்பின.
கோவை அரசு கலைக்கல்லூரியில் நேற்று சிறப்பு பிரிவினருக் கான கலந்தாய்வு மூலம் 100 இடங்கள் நிரம்பின.
கலந்தாய்வு
கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி., பி.ஏ., பொருளா தாரம் உள்பட 23 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மொத்தம் உள்ள 1,433 இடங்களுக்கு 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
மாணவர்க ளின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடை பெற்றது. அதில் அழைப்பு கடிதம் பெற்றவர்கள் கலந்து கொண்ட னர்.
கலந்தாய்வை கல்லூரி முதல்வர் உலகி தொடங்கி வைத்தார். முதலில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட் டன. அவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்த னர்.
இறுதியில் தேர்வானவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை
இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
இந்த சிறப்பு பிரிவில் தேசிய மாணவர் படையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கிய 43 இடங்களும் நேற்று நிரம்பியது. மாற்றுத்திறனாளிகளுக்கு 72 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் கலந்தாய்வில் 52 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதில் 46 பேர் தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்த னர். தேசிய மாணவர் படையினருக்கு ஒதுக்கப்பட்ட 1 இடம் நிரம்பியது. முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கிய 9 இடங்களும் நிரம்பின.
இதுதவிர அந்தமான், நிகோபார் தீவில் தமிழ் மொழியை தேர்வு செய்து படித்த மாணவர்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு மாணவர் மட்டும் கலந்து கொண்டார்.
அவருக்கு தேர்வு செய்த பாடப்பிரிவு வழங்கப்பட்டது. அந்த வகையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மொத்தம் 100 இடங்கள் நிரம்பின.
பொதுப்பிரிவு
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதில் 1-ந் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், புள்ளியியல், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நடத்தப் படும். 3-ந் தேதி அரசியல் அறிவியல், பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம், பாதுகாப்பு துறை சார்ந்த படிப்புகள் உள்ளிட் டவற்றிற்கும், 5-ந் தேதி பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.