100 மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-30 19:59 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வண்ணாரப்பூண்டி பகுதியில் மது விற்கப்படுவதாக வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் வண்ணாரப்பூண்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து (வயது 60) என்பவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை அட்டைப் பெட்டியில் வைத்து கொண்டு வந்தார். அவரை மறித்து சோதனை செய்தபோது, அதில் 100 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்