100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புளியங்குடியில் வீட்டு முன்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.;
புளியங்குடி:
நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் புளியங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புளியங்குடியைச் சேர்ந்த முகமது அலி என்பவர் வீட்டு முன்பு 100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து, முகமது அலியை தேடி வருகிறார்கள்.