வீட்டில் பதுக்கிய 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-07-05 18:19 GMT

ராமேசுவரம்,

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரம் புலித்தேவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கடல் அட்டைகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஏராளமான பாத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது

இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய வில்வமூர்த்தியை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்