100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வடமதுரை பகுதியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-12 15:27 GMT

வடமதுரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனாதேவி, சுகாதார ஆய்வாளர்கள் யூசுப்கான், தங்கராஜ் ஆகியோரை கொண்ட குழுவினர் வடமதுரை பகுதியில் உள்ள டீக்கடை, பேக்கரி, ஓட்டல் மற்றும் மளிகை கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்