புதுக்கோட்டையில் 100 அடி நீளத்தில் பிரமாண்ட தேசிய கொடி

புதுக்கோட்டையில் 100 அடி நீளத்தில் பிரமாண்ட தேசிய கொடி வரையப்பட்டது.;

Update: 2022-08-12 19:08 GMT

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் பழைய மருத்துவமனை சுவற்றில் 100 அடி நீளத்திலும் 12 அடி உயரத்திலும் பிரமாண்ட தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக செல்வோர் பிரமிப்புடன் பார்த்து சென்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்