கஞ்சா கடத்தல் ஆசாமிகள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை

Update: 2022-12-20 18:45 GMT

கோவை

கோவை சாரமேடு திப்புநகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது36). கடந்த 14.12.2017 அன்று காந்திபுரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது அவர் வைத்து இருந்த சாக்குப்பையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து கோவைக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஷாஜகான் மீது கோவை போதை பொருள் ஒழிப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம்சாட்டப்பட்ட ஷாஜகானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதுபோல் ஈரோடு அருகே உள்ள உத்தகண்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை கடத்தி விற்பனைக்கு வைத்து இருந்ததாக கடந்த 31.10.2018 அன்று கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு கோவை போதை பொருள் ஒழிப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம்சாட்டப் பட்ட குமாரவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்