ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்

தலைவாசலில் 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-10-19 19:45 GMT

தலைவாசலில் 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மாணவி கடத்தல்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த மாணவி திடீரென மாயமானர். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் மகள் காணாமல் போனது குறித்து மாணவியின் பெற்றோர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் முத்தையன் (46) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

10 ஆண்டுகள் ஜெயில்

அதே ஆண்டு மே மாதம் 2-ந் தேதி அந்த மாணவியை ஆத்தூர் பஸ் நிலையத்தில் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். மாணவியை கடத்தி சென்ற ஆசிரியர், அவரை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. உடனே போலீசார் ஆசிரியர் முத்தையனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக முத்தையனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்