மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை - மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து மதுரை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

Update: 2022-12-22 21:05 GMT


கொட்டாம்பட்டியை அடுத்த மனப்பச்சேரியை சேர்ந்தவர் மனமோகன்ராஜ் (வயது 42). இவர் கடந்த 2014-ம் ஆண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் உறவினர்கள் மேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மனமோகன்ராஜ் கைதானார். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ஆஜரானார். விசாரணை முடிவில் மனமோகன்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்