தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-11-01 19:05 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லூர் பாண்டியன் (வயது 27). கூலித் தொழிலாளி. கடந்த 1.8.2017 அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லூர் பாண்டியனை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாலியல் தொல்லை கொடுத்த நல்லூர் பாண்டியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்