வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). பழ வியாபாரி. இவர் 6.12.2018 அன்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைெபற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து மாரியப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.