சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-04-24 18:45 GMT

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிறுமி பலாத்காரம்

நெல்லை பாளையங்கோட்டை மேடை போலீஸ் நிலைய தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் அய்யப்பன் (வயது 29). இவர் கடந்த 21.8.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், பசுவந்தனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 18.9.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

10 ஆண்டு ஜெயில்

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி, அரசு வக்கீல் முத்துலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி, ஏட்டு இந்திரா ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்