கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-13 21:51 GMT


கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

போலீசார் சோதனை

கடந்த 2021-ம் ஆண்டில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பம் மெட்டு பகுதியில் மொபட்டில் வந்தவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் 24 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. விசாரணையில், கம்பத்தை சேர்ந்த ரமேஷ் (41) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறை

இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். முடிவில், ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்