நிதிநிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடியே 37 லட்சம் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்ட னை விதித்து டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-04-13 18:45 GMT

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடியே 37 லட்சம் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்ட னை விதித்து டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நிதி நிறுவன இயக்குனர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே தாசவநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கலைமணி (வயது 45). இவர் அதே பகுதி யில் நிதி நிறுவனங்கள் நடத்தி இயக்குனராக இருந்து வந்தார். இதில் கலைமணியின் தந்தை பழனிசாமி கவுண்டர் (65), மாமா சிவசுப்பிரமணி (58), நண்பர் சாமிநாதன் (48) ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை நம்பி வெள்ளக் கோவில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் அசலை கொடுக்க வில்லை.

ரூ.2.37 கோடி மோசடி

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 24 பேரிடம் ரூ.2 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்துகலைமணி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ் நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

அதில் குற்றம் சாட்டப்பட்ட கலைமணி, பழனிசாமி கவுண்டர், சாமிநாதன், சிவசுப்பிரமணி ஆகியோர் டான்பிட் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கில் கலைமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.51 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமி கவுண்டர், சாமி நாதன், சிவசுப்பிரமணி ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என்று கூறி 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட கலைமணியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்