எட்டயபுரத்தில் பெண்ணை கர்ப்பமாக்கியதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை

எட்டயபுரத்தில் பெண்ணை கர்ப்பமாக்கியதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

Update: 2022-11-30 18:45 GMT

எட்டயபுரத்தில் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

கூலித் தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீராவிபட்டியை சேர்ந்தவர் கவுன்டமணி. இவருடைய மகன் அழகுராஜ் (வயது 30). கூலித் தொழிலாளி. இவர் எட்டயபுரத்தில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது தையல் படித்து வந்த 26 வயதான ஒரு பெண்ணுக்கும், அழகுராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது.

இதனை தொடர்ந்து அழகுராஜ், கடந்த 7.10.15 அன்று ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை கற்பழித்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இதனால் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அழகுராஜை வற்புறுத்தினார். ஆனால் அழகுராஜ் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

10 ஆண்டு ஜெயில்

இது குறித்து அந்த பெண் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுராஜை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம் சாட்டப்பட்ட அழகுராஜிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எல்லம்மாள் ஆஜர் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்