ஆத்தூர் அருகே ஆட்களை ஏற்றி சென்ற 10 வாகனங்கள் பறிமுதல்

ஆத்தூர் அருகே ஆட்களை ஏற்றி சென்ற 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-09-13 22:33 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லாரிகள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் புறவழிச்சாலை பகுதிகளில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்களை ஏற்றி வந்த 5 சரக்கு வாகனங்கள், 2 லாரிகள் ஒரு பொக்லைன் எந்திரம் உள்பட 10 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்