10 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

ஆத்தூர் அருகே 10 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-09 19:30 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியில் ஆத்தூர் புறநகர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், ஏட்டுகள் மணி, ரமேஷ் ஆகியோர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு சரக்கு லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அதில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியுடன் லாரியை ஒட்டி வந்த லாரி டிரைவரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா பெத்தூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் நவீன் (25) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வரை கொண்டு செல்லவும், இடையில் செல்போனில் கூறப்படும் இடத்தில் ரேஷன் அரிசியை இறக்கி விடுமாறு அனுப்பினார்கள். இந்த அரிசி யாருக்கு செல்கிறது என்ற விவரம் எனக்கு தெரியாது என்று போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார், லாரி டிரைவர் நவீன் மற்றும் லாரியுடன் 10 டன் ரேஷன் அரிசியை சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

===

Tags:    

மேலும் செய்திகள்