ரூ.10 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-09-02 17:10 GMT

நாகை பகுதிகளில் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில், சில்லரை விற்பனை மேலாளர் சங்கர் உள்பட அதிகாரிகள் நாகை பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைத்து பெண் ஒருவர் மது விற்பனை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகளை கண்டதும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை டாஸ்மாக் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்னை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்