10 பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வு கூட்டம்

ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. அளித்துள்ள 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-04 17:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கொடுத்துள்ள தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சினைகளைக்கு தீர்வு காண்பது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் வழங்கியுள்ள 10 கோரிக்கைகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என துறைச்சார்ந்த அலுவலர்களை கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்