சாத்தான்குளம் அருகே கோஷ்டிமோதலில் 10 பேர் படுகாயம்

சாத்தான்குளம் அருகே கோஷ்டிமோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-09 13:11 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள செம்மன் குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6-ந் தேதி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க சென்னையில் இரும்புக்கடை நடத்தி வரும் லிங்கதுரை மகன் பெருமாள்(வயது 25) ஊருக்கு வந்திருந்தார். சமீபத்தில் திருமணமான இவர் விழாவிற்கு வரி கொடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ெபருமாள் தரப்பினருக்கும், அதேஊரை சேர்ந்த ஜெயவேல் தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியதில் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த 10 படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் ேசர்ந்த பொன்னையா மகன் பாண்டி(52), பெருமாள் மகன் முருகன்(39), பாலஇசக்கி மகன் பாலமுருகன்(20), மகாராஜா மகன் சுடலை(25), அய்யாச்சாமி மகன் ராமர்(47), சுவாமி மகன் சுயம்பு(55), லிங்கத்துரை(53) ஆகிய 7பேரை கைது செய்தனர். மேலும் இருதரப்பையும் சேர்ந்த 16 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்