குட்கா விற்ற 10 பேர் கைது

Update:2023-03-16 01:00 IST

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்ற கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி யுனிஸ் (வயது 27), பூசாரிப்பட்டி ராமன் (46), ஓசூர் பாலாஜிநகர் பெரியசாமி (55), ஓசூர் குமுதேப்பள்ளி செல்வம் (45), மூக்கண்டப்பள்ளி கியாஸ் உத்தின் (28), சூளகிரி காமராஜ் நகர் பயாஸ் (56), சிப்பாய்பாளையம் முகமது இர்பான் (29), பாகலூர் சத்யமங்கலம் வெங்கடசாமி (38), பேரிகை சாலை பாக்யம்மா (53), பி.குருபரப்பள்ளி லோகநாதன் (46), ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்