மது விற்ற 10 பேர் கைது

மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-20 18:30 GMT

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குளித்தலையை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 54), உடையாபட்டியை சேர்ந்த காமராஜர் (60), கடவூரை சேர்ந்த தங்கராஜ் (55), தங்கதுரை (45), இந்திரா காலனியை சேர்ந்த ராஜா (35), கோயம்பள்ளியை சேர்ந்த மலர்விழி (55), மண்மங்கலத்தை சேர்ந்த பிரியா (40), புரவிபாளையத்தை சேர்ந்த நிதிஷ்குமார் (22), புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா (45), பசுபதிபாளையத்தை சேர்ந்த பெரியக்காள் (66) ஆகிய 10 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 119 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்