கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே தனியார் ஓட்டல் உள்ளது. இதன் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அங்கு பணம் வைத்து சூதாடிய காட்டூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 29), சக்திகுமார் (54), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த குப்பன் (43), அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த சதீஷ் (29), திருநாவுக்கரசு (46), கணேசன் (39) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,200 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், அன்னதானப்பட்டியில் சூதாடிய பன்னீர்செல்வம் (43), மோகன்குமார் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.