வடமாடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
வடமாடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
சோமரசம்பேட்டை:
சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை வன்னியம்மன் கோவிலில் வடமாடு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் கோவில் காளை மற்றும் மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 17 ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டன. அந்த காளைகளை வீரர்கள் குழுவினர் அடக்க முயன்றனர்.
காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிடிபடாத காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.