முயல் வேட்டையாடிய 10 பேருக்கு அபராதம்

முயல் வேட்டையாடிய 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-17 21:15 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள சூரங்குடி பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், வனசரகர் யோகேஸ்வரன் தலைமையில் வனவர்கள் முத்தையா, ஜெபிந்தர்சிங் ஜாக்சன், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வேட்டை நாய்களுடன் முயல்களை வேட்டையாடி கொண்டிருந்த ஏர்வாடியை சேர்ந்த மனோகரன் பாண்டியன் (வயது 48), நம்பிநகரை சேர்ந்த அருமைதுரை (36), தென்னிமலையை சேர்ந்த சிவா (26), பொன் (32), ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் (38), டோனாவூரை சேர்ந்த ஜோசப் அன்பரசன் (33), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மலையாண்டி (27), கல்லத்தியை சேர்ந்த ராமமூர்த்தி (32), இளையநயினார்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் (50), மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் (37) ஆகிய 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 10 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 5 மோட்டார்சைக்கிள்கள், 7 செல்போன்கள், 4 வேட்டை நாய்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய தங்கையத்தை சேர்ந்த லிங்கத்தை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்