செக்கானூரணி அருகே வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது

செக்கானூரணி அருகே செல்போன் பறித்ததாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-20 21:01 GMT

செக்கானூரணி, 

செக்கானூரணி அருகே செல்போன் பறித்ததாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடித்துக்கொலை

மகா சிவராத்திரியை முன்னிட்டு கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சிவகுமார் மகன் சுபாஷ் (வயது 21) தனது நண்பர்களுடன் வந்திருந்தார். கோவிலில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுபாஷ் வைத்திருந்த செல்போனை, கருமாத்தூர் தவசித்தேவர் காலனி பகுதியை சேர்ந்த பாண்டி மகன் நீதி (வயது 21) மற்றும் அவரது கூட்டாளிகள் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மரக்கட்டையால் தாக்கியதில் நீதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

10 பேர் கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதியின் தாய் அன்னலட்சுமி, செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை தொடர்பாக சுபாஷ், தாமோதரன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்