ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-10 விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். இந்த சோதனை முடிவில் குறைபாடுகள் இருந்த 10 கடைகளின் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-09-13 21:49 GMT

சேலம் ரெட்டிப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 கடைகளில் சிறு,சிறு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்