தலைமை ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
நெல்லை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை போனது.
நெல்லை அருகே உள்ள தாழையூத்து விநாயகர்நகர் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் பூல்பாண்டி. இவருடைய மனைவி அழகுகிருஷ்ணகுமாரி (வயது 54). இவர் நெல்லை அருகே மேட்டு பிராஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அழகுகிருஷ்ணகுமாரி வீட்டில் தூங்கும்போது கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினாராம். இதனை அறிந்த மர்மநபர் வீட்டில் புகுந்து அங்கிருந்த 8 பவுன் தங்க சங்கிலி, தங்க மோதிரங்கள் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நேற்று காலையில் இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அழகுகிருஷ்ணகுமாரி தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.