திருச்சியில் ரூ.10¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ.10¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-05-15 19:30 GMT

சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த சிவகுமார் (வயது 45) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தனி அறையில் வைத்து சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்