வியாபாரியிடம் பஞ்சு வாங்கி ரூ.10 லட்சம் மோசடி

கோவையில் வியாபாரியிடம் பஞ்சு வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த மில் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-06-09 20:45 GMT

பீளமேடு

கோவையில் வியாபாரியிடம் பஞ்சு வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த மில் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சு விற்பனை

கோவை சீராபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி பூங்கோதை(வயது 58). இவர் பருத்தி பஞ்சு விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி காமாட்சி தேவி(55), தான் நடத்தி வரும் மில்லுக்கு பயன்படுத்த பூங்கோதையிடம் ரூ.9 லட்சத்து 95 ஆயிரத்து 739-க்கு பஞ்சு வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உரிய தொகையை வழங்கவில்லை. அந்த தொகையை ஒரு வாரத்திற்குள் கொடுப்பதாக அவர் கூறி உள்ளார்.

மோசடி

எனினும் அவர் கூறியதுபோன்று, வாங்கிய பஞ்சுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அவரிடம் பலமுறை பூங்கோதை கேட்டும் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பூங்கோதை, பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் காமாட்சி தேவி மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்