சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திவரப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை செண்ட்ரலில் டெல்லியில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லியில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திவரப்பட்டு உள்ளது.
கஞ்சா கடத்தியது தொடர்பாக அப்துல் காதர் என்ற கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் கைதுசெய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.